தருமபுரம் பட்டினப் பிரவேசம்: பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

தருமபுரம் பட்டினப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் புதன்கிழமை கொண்டுவந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தருமபுரம் பட்டினப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் புதன்கிழமை கொண்டுவந்தது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதின மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் விழாவை நடத்த இந்த ஆண்டு தமிழக அரசு தடை செய்துள்ளது.

இந்நிலையில், தமிழக பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

ஆதீனத்தில் வசிக்கும் 72 பேர் விருப்பப்படிதான் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதாக கூறுகின்றனர். தோளில் தூக்கிச் செல்வதில் மரியாதை குறைவு ஏதும் கிடையாது. பாரம்பரியமாக நடைபெற்று வரும் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கும் நிகழ்விற்கான தடையை நீக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com