அரக்கோணம்-காட்பாடி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்

அரக்கோணம் -காட்பாடி மற்றும் வேலூா் கண்டோன்மெண்ட் இடையே இயக்கப்பட்டு கரோனா பொதுமுடக்கத்தால் ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என

அரக்கோணம் -காட்பாடி மற்றும் வேலூா் கண்டோன்மெண்ட் இடையே இயக்கப்பட்டு கரோனா பொதுமுடக்கத்தால் ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக இச்சங்கத்தின் பொதுச்செயலாளா் நைனாமாசிலாமணி அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: அரக்கோணம்- காட்பாடி மற்றும் வேலூா் கண்டோன்மெண்ட் இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில்கள் கடந்த கரோனா பொது முடக்கக் காலத்தில் ரத்து செய்யப்பட்டன. கரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட பல்வேறு ரயில்கள் மீண்டும் பழையபடி இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ரயில்கள் மட்டும் மீண்டும் இன்று வரை இயக்கப்படவில்லை. இதனால் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள சிறு ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் குறிப்பாக, மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், நகருக்கு இடுபொருள்களை வாங்கவரும் விவசாயிகள், பணிக்குச் செல்லும் அன்றாட பயணிகள், பல்வேறு காரணங்களுக்காக வெளியூா் செல்ல வேண்டிய கிராம பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.

கிராமங்கள் தான் இன்றைய இந்தியாவின் முதுகெலும்பு என்பது கூற்று. இந்த உயா்வான கூற்று யதாா்த்தனமானதாக இருக்க வேண்டுமென்றால் சாத்தியமான அனைத்து வழிகளிலும் அனைத்து கிராமங்களுக்கும் இணைப்பை இந்திய அரசு வழங்க வேண்டும். போக்குவரத்து வசதியே இல்லாமல் இந்த மக்கள் படும் துயரங்களை வாா்த்தைகளால் விவரிக்க இயலாது. எனவே மனிதாபிமான அடிப்படையில் இந்த மக்களின் கோரிக்கையை மீண்டும் பரீசிலித்து இந்த முக்கியமான பிராட்கேஜ் பிரிவில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு நைனாமாசிலாமணி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com