மாமல்லபுரம்
மாமல்லபுரம்

சுற்றுலாத் துறையின் முக்கிய அறிவிப்புகள்

தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு எடுத்திருக்கும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இன்று சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.


சென்னை: தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு எடுத்திருக்கும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இன்று சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் மா. மதிவேந்தன் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

300 தலங்களுக்கான பெருந்திட்டம்
மாநிலத்தில் 300 சுற்றுலாத் தலங்களுக்கான பெருந்திட்டம் சுற்றுலாத் துறையால் வகுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களின் தரம் மற்றும் பிற வசதிகள் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த பெருந்திட்டம் வழிவகுக்கும்.

யாத்திரைத் தலங்களின் சுற்றுலா ஈர்ப்பினை மேம்படுத்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள பிரசாத் திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம் மேம்படுத்தப்படும்.

தினசரி திருப்பதி சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தும் சுற்றுலாக்களில் ஒருநாள் திருப்பதி சுற்றுலா மிகவும் பிரபலம். அதன்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்பொழுது தமிழ்நாட்டு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தொகுப்பு சுற்றுலா மூலம் வருகை தரும் பக்தர்களுக்கு நாள்தோறும் 150 விரைவு தரிசன சீட்டுகளை வழங்குகிறது .இது மேலும் 150 அதிகரித்து வழங்கினால், மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களிலிருந்தும் தினசரி திருப்பதி சுற்றுலாவினை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிறப்பு தரிசன சீட்டுகள்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தும் ஆன்மிக சுற்றுலா தொகுப்பினை மேலும் பிரபலப்படுத்த, தமிழகத்தில் உள்ள 33 முக்கிய கோயில்களில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ஆன்மிக தொகுப்பு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு சிறப்பு தரிசன சீட்டுகள் வழங்க இந்து சமய அறநிலையங்கள் துறை அனுமதி அளித்துள்ளது.


குழுவாகச் செல்ல விரும்புகின்ற சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆயத்த சுற்றுலா, அரசு ஊழியர்களுக்கான விடுப்பு பயணச் சலுகை சுற்றுலா மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்கிறது.

திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து பொழுதுபோக்கு படகு சேவையை ராயல் மெட்ராஸ் உலாப்படகு கிளப்புடன் இணைந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், மாமல்லபுரத்தை ஒரு அடையாளச் சின்னமாக மேம்படுத்துதல்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உணவகங்களை மேம்படுத்துதல்
தமிழகத்தில் உள்ள படகுக் குழாம்கள் தனித்தனிச் சிறப்புடன் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com