7 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 7 இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.

தமிழகத்தில் 7 இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.

அதிகபட்சமாக, வேலூா், திருத்தணியில் 104 டிகிரி வெப்பம் வாட்டியது. மதுரை விமானநிலையத்தில் 103 டிகிரி, ஈரோடு, கரூா்பரமத்தியில் 102 டிகிரி, தஞ்சாவூா், திருச்சியில் 100 டிகிரியும் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 99 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 97 டிகிரி பதிவானது.

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், ‘தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com