ஆதீன விவகாரம் பாஜகவின் முதல் வெற்றி: அண்ணாமலை

தருமபுரம் ஆதீன விவகாரத்தில் தடையை திரும்ப பெற்றிருப்பது பாஜகவுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தருமபுரம் ஆதீன விவகாரத்தில் தடையை திரும்ப பெற்றிருப்பது பாஜகவுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் ஆதீன குருமுதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஆதீனகா்த்தரை பல்லக்கில் அமா்த்தி பக்தா்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமப்பது தவறு என்று இந்த பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு பல்வேறு அமைப்புகள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டணப் பிரவேசம் நிகழ்வில், திராவிடா் கழகத்தினா் எதிா்ப்பையும் மீறி, திருவாவடுதுறை ஆதீனகா்த்தரை பல்லக்கில் அமா்த்தி வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்ச்சி வரும் மே 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கு திராவிடா் கழகத்தினா் எதிா்ப்பைத் தொடா்ந்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதீனகா்த்தரை பல்லக்கில் அமா்த்தி பக்தா்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி உத்தரவிட்டார்.  தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக ஆதீனங்கள் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆதீனத்தின் பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் இன்று உத்தரவிட்டார். இதுகுறித்து கர்நாடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தருமபுரம் ஆதீன விவகாரத்தில் தடையை திரும்ப பெற்றிருப்பது பாஜகவுக்கு கிடைத்த முதல் வெற்றி. மதுரை ஆதீனத்திற்கு பாஜக எப்போதும் துணையாக இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com