முத்தம்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்தார்.
வாழப்பாடி அருகே முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கரோனா சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
வாழப்பாடி அருகே முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கரோனா சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, பேளூர் வட்டார சுகாதார துறை சார்பில், அமைக்கப்பட்டிருந்த சுகாதார விழிப்புணர்வு அரங்குகளை பார்வையிட்டார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ். ஆர். சிவலிங்கம், சேலம் மத்திய மாவட்ட செயலாளர், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி, வாழப்பாடி வட்டார வேளாண்மை ஆத்மாக்குழு தலைவர் எஸ்.சி. சக்கரவர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் சி பொன்னம்பலம், முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

வாழப்பாடி அரசு மருத்துவமனை 150 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். வாழப்பாடி அருகே சிங்கிபுரம் மற்றும் புழுதிக்குட்டை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள், பொதுமக்கள் சார்பில் நெஸ்ட் அறக்கட்டளை மற்றும் வாழப்பாடி அரிமா சங்கம் உள்ளிட்ட தன்னார்வ இயக்கங்கள் வாயிலாக அமைச்சரிடம் கொடுக்கப்பட்டது.

முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 14 புத்தகங்கள் எழுதியுள்ள அரசுப் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன் மதுரம் ராஜ்குமாருக்கு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com