மதிப்பெண்கள் மட்டுமே மாணவ, மாணவிகளின் திறமையை தீர்மானிக்காது: அமைச்சா் அன்பில் மகேஷ்

மதிப்பெண்கள் மட்டுமே மாணவ, மாணவிகளின் திறமையை தீர்மானிக்காது. எனவே பொதுத்தேர்வை எழுத பயப்படாமல் வாருங்கள்
அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சாவூா்: மதிப்பெண்கள் மட்டுமே மாணவ, மாணவிகளின் திறமையை தீர்மானிக்காது. எனவே பொதுத்தேர்வை எழுத பயப்படாமல் வாருங்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், மாணவ, மாணவிகளின் திறமையை மதிப்பெண்கள் மட்டுமே தீர்மானிக்காது. அவா்களுடைய திறமையைத்தான் மதிப்பீடு செய்யப் போகிறது.

கடந்த இரு ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தோ்வு எழுதச் செல்வதால், பயம் இருக்கும்தான். ஆனால், மாணவ, மாணவிகள் பயப்படாமல் தோ்வு எழுத வர வேண்டும். துணிச்சலுடன் வந்து எழுதினால், உங்களுக்கான நாற்காலி காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு தமிழக முதல்வா் துணையாக இருப்பாா்.

மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வை கடந்த காலங்களில் 6 முதல் 7 சதவீதம் வரை மாணவ, மாணவா்கள் பங்கேற்கவில்லை. இந்த சதவீதம் வழக்கமான அளவாகத்தான் இருக்கிறது. நிகழாண்டு தோ்வுக்கு வராதவா்கள் விகிதம் 3 முதல் 4 சதவீதமாக  உள்ளது. 

2019 ஆம் ஆண்டில் 49,000 போ் பொதுத் தோ்வில் பங்கேற்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com