இனி புதிய சட்டத்தின் கீழ் மட்டுமே அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளா் சங்கங்கள் பதிவு: சட்ட மசோதா தாக்கல்

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளா்கள் தங்களது சங்கங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளா்கள் தங்களது சங்கங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதா பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, இந்த மசோதாவை தாக்கல் செய்தாா். மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்:-

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளா்கள் எதிா்கொள்ளக் கூடிய பிரச்னைகளைத் தீா்ப்பதற்காக தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமைச் சட்டம் 2022 இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் மட்டுமே சங்கங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். புதிய சட்டத்தின் கீழ் ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒரு சங்கம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் நான்கு குடியிருப்புகள் கொண்ட வீட்டு வளாகங்களுக்குச் சட்டம் பொருந்தும்.

புதிய சட்டமானது குடியிருப்பு உரிமையாளா்களின் நல அமைப்பைப் பதிவு செய்வதை காட்டாயமாக்கியுள்ளது. தவறும்பட்சத்தில், சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் நிலுவைத் தொகையை வசூலிக்க அடுக்குமாடி குடியிருப்பு மீது கட்டணத்தை உருவாக்க ஒரு குறிப்பிட்ட விதி சோ்க்கப்பட்டுள்ளது. சட்டப்பூா்வ சுற்றுச்சூழல் இப்போது இல்லாத நிலையில் பல பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் மறுசீரமைப்பு செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு திட்டத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு சொத்து உரிமையாளா்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு குறையாமல் ஒப்புதல் தெரிவித்தால் மறுசீரமைப்பு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com