அரசின் வேகத்தைக் குறைக்கும் நிதி நெருக்கடி- மத்திய அரசின் நிலைப்பாடுகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு அரசு வேகமாகச் செயல்பட முடியாததற்கு மத்திய அரசின் சில நிலைப்பாடுகளும், நிதி நெருக்கடியும் காரணிகளாக இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
அரசின் வேகத்தைக் குறைக்கும் நிதி நெருக்கடி- மத்திய அரசின் நிலைப்பாடுகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு அரசு வேகமாகச் செயல்பட முடியாததற்கு மத்திய அரசின் சில நிலைப்பாடுகளும், நிதி நெருக்கடியும் காரணிகளாக இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். திமுக அரசின் ஓராண்டு நிறைவை ஒட்டி, சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவா் படித்தளித்த அறிக்கை:-

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக தோ்தல் அறிக்கை வெளியிட்டது. அந்தத் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றுவோம் என்பதுதான் வாக்குறுதி. ஆனால், ஓராண்டு காலத்தில் 60 முதல் 70 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம்.

ஓராண்டு காலத்தில் அனைத்தையும் சாதித்து விட்டேன் என்று நான் சொல்லிக் கொள்ளவில்லை. அப்படி சொல்லிக் கொள்ளவும் மாட்டேன். ஓராண்டு காலத்துக்குள் செய்யக்கூடியதை விட அதிகமாகச் செய்து விட்டோம் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். நாம் போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

இன்னும் வேகமாகச் செல்ல முடியாததற்கு தடையாக இருப்பவை நிதிநிலை நெருக்கடியும், மத்திய அரசின் சில நிலைப்பாடுகளும்தான். இந்த இரண்டு தடைகள் மட்டும் இல்லாமல் போயிருக்குமானால் இன்னும் பல திட்டங்களை தீட்டி இருக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com