முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு நடத்திய கண்காணிப்பு குழுவினர்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை கண்காணிப்பு குழுவினர் 5 பேர்  திங்கள்கிழமை முல்லைப்பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்தினர்.
தேக்கடி படகு துறையிலிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு ஆய்வு செய்ய சென்ற கண்காணிப்பு குழுவினர்.
தேக்கடி படகு துறையிலிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு ஆய்வு செய்ய சென்ற கண்காணிப்பு குழுவினர்.


கம்பம்: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நியமித்த புதிய 2 உறுப்பினர்களை, சேர்த்து  கண்காணிப்பு குழுவினர் 5 பேர்  திங்கள்கிழமை முல்லைப்பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்தினர்.

பருவ காலநிலை மாறுபாடுகளான மழை மற்றும் வெயில் காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை பற்றி உச்ச நீதிமன்றம் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது, தற்போது கூடுதலாக 2 பேரை நியமித்துள்ளது.

திங்கள்கிழமை கண்காணிப்பு குழுவின் தலைவரும், மத்திய நீர்வள ஆணையகத்தின், அணைகள் பாதுகாப்பு குழுவின் முதன்மை பொறியாளருமான குல்ஷன் ராஜ்  தலைமையில்,  தமிழக அரசு தரப்பில் நீர்வள துறையின் கூடுதல் செயலாளர் முனைவர். சந்தீப் சக்சேனா, காவேரி தொழில்நுட்ப குழு  தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு தரப்பில் நீர்ப்பாசனத்துறை கூடுதல் செயலாளர் டி.கே. ஜோஸ், முதன்மை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் தேக்கடி படகுத் துறைக்கு வந்தனர்.

அங்கிருந்து படகு மூலம் பிரதான அணை, பேபி அணை, சுரங்க பகுதி, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com