100% முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில்  100 சதவீத முதல் தவணை கரோனா  தடுப்பூசி  செலுத்த இலக்கை அடைய  திட்டமிட்டுள்ளதாக தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்).
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்).

சென்னை: தமிழகத்தில்  100 சதவீத முதல் தவணை கரோனா  தடுப்பூசி  செலுத்த இலக்கை அடைய  திட்டமிட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 93.44 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

81.55 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். தமிழகத்தில் செப்டம்பர் 12, 2021 முதல்  நடைபெற்ற 28 மெகா தடுப்பூசி முகாம்களின் மூலம் மொத்தம் 4.12 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, 17 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 12-14 வயதுக்குட்பட்டவர்களில் 81.3 சதவீதம் பேர் முதல் தவணை  செலுத்தியுள்ளனர் மற்றும்  இரண்டாவது தவணை 9,42,469 அல்லது 44 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர் என்று  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15-18 வயதுக்குட்பட்டவர்களில், 29,69,353 அல்லது 88.74 சதவீதம் பேர் முதல் தவணையையும், 23,55,808 அல்லது 70.41 சதவீதம் பேர் இரண்டாவது தவணையையும் செலுத்துயுள்ளனர் என்று  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய அனைவருக்கும் 100 சதவீத முதல் தவணை தடுப்பூசி இலக்கை அடைய அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். தடுப்பூசி போடாதவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி தடுப்பூசி போட சுகாதாரப் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஐ.ஏ.என்.எஸ். செய்தியாளர்களிடம்  கூறியதாவது: "தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளின் முதல் தவணை செலுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது, மேலும் தகுதியான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பிரசாரம் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com