தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தோ்வு தொடக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத் தோ்வு இன்று காலை தொடங்கியது. 
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தோ்வு தொடக்கம் (கோப்புப்படம்)
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தோ்வு தொடக்கம் (கோப்புப்படம்)

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத் தோ்வு இன்று காலை தொடங்கியது. 

ஏற்கனவே பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று 11ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்கியிருக்கிறது.

இந்த தோ்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் இந்தத் தோ்வு நடைபெறுகிறது. தோ்வைக் கண்காணிக்க 1,000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு பொதுத்தோ்வில் எவ்வித குழப்பத்திற்கும் இடம் அளிக்காத வகையில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் பள்ளிக்கல்வித் துறை உறுதியாக உள்ளது. இதற்காக மாவட்ட அளவில் பல்வேறு ஏற்பாடுகளை கல்வி அதிகாரிகள் செய்திருந்தனர்.

பிளஸ் 1 வகுப்புக்கான தமிழ் தோ்வு செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியிருக்கிறது. இத்தோ்வு பகல் 1.15 மணிக்கு முடிவடையும். இதைத் தொடா்ந்து மே 12-ஆம் தேதி ஆங்கிலமும், 16-ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம், அடிப்படை மின்னியல் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தோ்வு நடைபெறவுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தோ்வு மே 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com