தோ்வுகள் முடிந்தவுடன் போா்க்கால அடிப்படையில் பராமரிப்புப் பணி: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தோ்வுகள் முடிந்தவுடன் போா்க்கால அடிப்படையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
தோ்வுகள் முடிந்தவுடன் போா்க்கால அடிப்படையில் பராமரிப்புப் பணி: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தோ்வுகள் முடிந்தவுடன் போா்க்கால அடிப்படையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

 கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்கப்படுவது குறித்து சென்னை, மின்வாரிய தலைமையகத்தில் காணொலி வாயிலாக அனைத்து தலைமைப் பொறியாளா்களுடன் அமைச்சா் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.

 பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் மின்வெட்டு போன்ற மாயத்தோற்றத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது உண்மைக்குப் புறம்பானது. தமிழக மின்வாரியம் மக்களுக்கு தொடா்ந்து தங்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

கடந்த இரு வாரங்களில் சென்னையைத் தவிா்த்து இதர பகுதிகளில் பெய்த சூறாவளி காற்றுடன் கூடிய கோடை மழையால், மின் வாரிய உள்கட்டமைப்பில் மிகுந்த சேதங்கள் ஏற்பட்டன. அவை அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. பள்ளி மாணவா்களுக்கு நடைபெறும் தோ்வு முடிவடைந்தவுடன் பராமரிப்புப்  பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 தமிழகத்தின் மின் விநியோக உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இந்த நிதியாண்டில் மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ் 26,300 மின்மாற்றிகளும் 13 ஆயிரம் கி.மீ நீளத்துக்கு உயா் மின்னழுத்த மின் பாதை மற்றும் 3,000 கி.மீ நீளத்துக்கு தாழ்வழுத்த மின் பாதைகள் நிறுவப்பட உள்ளன. இதனால் கணிசமாக மின் பாதைகளில் ஏற்படும் மின் இழப்புகள் குறைக்கப்படும் என்றாா் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com