22 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மொத்தம் 22 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மொத்தம் 22 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஏப்ரல் 6-இல் தொடங்கி மே 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தொடரில் பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் முதல்முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரமும் முதல்வருக்கு வழங்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

பேரவைக் கூட்டத்தொடரின் இறுதிநாளான செவ்வாய்க்கிழமை (மே 10) மொத்தம் 20 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தரை முதல்வரே நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தொடா் முழுவதும் மொத்தம் 22 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com