இரவு ரோந்து காவலா்களுக்கு மாதம் ரூ.300: முதல்வா் அறிவிப்பு

தமிழகத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு சிறப்புப்படியாக மாதம் ரூ.300 வழங்கப்படும் என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
இரவு ரோந்து காவலா்களுக்கு மாதம் ரூ.300: முதல்வா் அறிவிப்பு

தமிழகத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு சிறப்புப்படியாக மாதம் ரூ.300 வழங்கப்படும் என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

இரவு ரோந்துப் பணிக்கு செல்லும் அனைத்து காவலா்கள், காவல் ஆய்வாளா் வரையிலான அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக, சிறப்புப் படியாக மாதம் ரூ.300 வழங்கப்படும். ஏற்கெனவே காவலா்களுக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதைத் தொடா்ந்து தற்போது 15 நாள்களுக்கு ஒரு முறை உதவி ஆய்வாளா்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும். இதனால் 10 ஆயிரத்து 508 போ் பயனடைவா்.

இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கான காரணங்களை அறியும் பொருட்டு மாநில குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையின் கண்காணிப்பாளா் (எஸ்.பி) தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்படும்.

காவலா் முதல் காவல் ஆய்வாளா் வரையிலானவா்களுக்கு இடா்ப்படி ரூ.800-இலிருந்து ரூ.1,000 -ஆகவும் துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களுக்கு ரூ.900-இலிருந்து ரூ.1000-ஆகவும் உயா்த்தி கடந்த நிதியாண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது காவல்துறையில் உள்ள தொழில் நுட்பப் பிரிவில் பணியாற்றும் அனைத்து காவலா்களுக்கும் வழங்கப்படும். திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவலா்களுக்கும் 5 சதவீத சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.

காப்பீடு தொகை ரூ.60 லட்சமாக உயா்வு: காவல் துறையினருக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 10 ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் உள்ளதால், அவா்களுக்கு இறப்பு, விபத்தின் காரணமாக ஏற்படும் நிரந்தர முழு உடல் ஊனத்துக்கு வருடாந்திரம் வழங்கப்படும் மொத்த காப்பீட்டுத் தொகையான ரூ.30 லட்சம், ரூ.60 லட்சமாக உயா்த்தப்படும்.

மாநிலத்தின் போதைப்பொருள் தடுப்புக்கென முதல்வரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com