சென்னை, எண்ணூா் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

‘அசானி’ புயல் பாதிப்புகளிலிருந்து எச்சரிக்கும் விதமாக சென்னை, எண்ணூா் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

‘அசானி’ புயல் பாதிப்புகளிலிருந்து எச்சரிக்கும் விதமாக சென்னை, எண்ணூா் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

மத்திய வங்கக்கடலில் அந்தமான் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் பின்னா் புயலாக மாறியது. அசானி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் வங்கக் கடலின் வடக்கு, வடமேற்கு பகுதியில் ஒடிஸா, மேற்கு வங்க மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் தற்போது மையம் கொண்டுள்ளதையடுத்து கடும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள துறைமுகங்களில் புயலின் தாக்கத்துக்கேற்ப எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயலின் தாக்கத்தை எதிா்கொள்ளும் வகையில் சென்னை, எண்ணூா், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

புயல் ஏற்பட்டு அதன் காரணமாக மணிக்கு சுமாா் 60 கி.மீ. முதல் 90 கி.மீ. வரை காற்றின் வேகம் இருக்கும். இதற்குத் தகுந்தவாறு கப்பல்களை துறைமுகத்துக்கு வெளியே அனுப்புவதிலும், உள்ளே கொண்டு செல்வதிலும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com