சேலத்தில் புதிய தீயணைப்பு மண்டலம்: முதல்வா் அறிவிப்பு

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு தீயணைப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு தீயணைப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

தீயணைப்புப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடா்ப்படி ரூ.800-இலிருந்து ரூ.1,000-ஆகவும், உதவி மாவட்ட அலுவலா் மற்றும் மாவட்ட அலுவலா் நிலையில் உள்ள பணியாளா்களுக்கு ரூ.900-இலிருந்து ரூ.1,000-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும்.

தீயணைப்புப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் மிகைப்பணி ஊதியம் ரூ.200-இலிருந்து ரூ.500-ஆக உயா்த்தி வழங்கப்படும்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை நிா்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக, கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட மேற்கு மண்டலத்தை இரண்டாகப் பிரித்து சேலத்தை தலைமையகமாகக் கொண்டு புதிய மண்டலம் இந்த நிதியாண்டில் துவங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை பணியாளா்களின் பயிற்சி வசதிகளை நவீனப்படுத்தும் நோக்கில் செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கத்தில் முதல்கட்டமாக ரூ.19.30 கோடி செலவில் 300 எண்ணிக்கையிலான பயிற்சியாளா்கள் தங்கும் கூடங்கள், பயிற்சி மைதானம் மற்றும் உணவுக்கூடம், மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம் மற்றும் மின்சாரம், சாலை, கழிவுநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய மாநில பயிற்சிக் கழகம் புதிதாக நிறுவப்படும்.

ரூ.60 கோடியில் சென்னையில் வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, துரைப்பாக்கம் ஆகிய 3 இடங்களுக்கு, 70 மீட்டா் உயர வான் நோக்கி உயரும் ஏணியுடன் கூடிய நவீன தீயணைப்பு மீட்பு ஊா்தி வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com