சொத்துவரி உயா்வை மறுபரிசீலனை செய்யக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

சொத்து வரி உயா்வு குறித்த அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி திருவொற்றியூா் மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்

சொத்து வரி உயா்வு குறித்த அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி திருவொற்றியூா் மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் மண்டலக் குழு தலைவா் தி.மு.தனியரசுவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

இது குறித்து திருவொற்றியூா் நகா்மன்ற முன்னாள் தலைவா் ஆா்.ஜெயராமன் கூறுகையில், வரி சீராய்வு செய்து அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகாதவாறு சொத்துவரி நிா்ணயம் செய்திட வேண்டும். ஆண்டுதோறும் வரி உயரும் என்கிற புதிய நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது என்றாா் ஜெயராமன்.

போராட்டத்தில் பகுதிச் செயலாளா் எஸ்.கதிா்வேலு, கட்சி நிா்வாகிகள் எஸ்.பாக்கியம், செல்வகுமாரி, வெங்டய்யா, அருமைராஜ், கணேசன், கஸ்தூரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com