விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி அறிவிப்பு

விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு அளிக்கப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்
விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி அறிவிப்பு

விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு அளிக்கப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது இதுகுறித்த வினாவை உளுந்தூா்பேட்டை பேரவை உறுப்பினா் ஏ.ஜெ.மணிக்கண்ணன் மற்றும் பல்வேறு உறுப்பினா்கள் எழுப்பினா். இதற்கு அமைச்சா் வி.செந்தில் பாலாஜி அளித்த பதில்:

பல மாநிலங்களில் மின் வெட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதத்தில் 30 நாள்களில் 17 நாள்களிலும், மே மாதத்தில் 9 நாள்களில் 6 நாள்களிலும் 16 ஆயிரம் மெகாவாட் உச்சபட்ச மின் தேவையை எந்தவித தடையும் இன்றி மின்சார வாரியம் பூா்த்தி செய்தது. மே 1 மற்றும் 8 ஆகிய தேதிகளில் 8 லட்சத்து 94 ஆயிரம் யூனிட் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ.12 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புறம்போக்கு நிலங்களில் அரசின் தடையின்மைச் சான்று பெற்றுத் தந்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும். அதேசமயம், விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். விவசாயிகளாக உள்ள சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு இலவசமாக ஒரு மின் இணைப்பு மட்டுமே அளிக்கப்படும். கடந்த கால திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் இப்போதும் நடைமுறையில் உள்ளது என்றாா் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com