மகிந்த ராஜபட்சவுக்கு இந்தியாதஞ்சம் அளிக்கக் கூடாது: அன்புமணி

இலங்கை முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபட்சவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இலங்கை முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபட்சவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் ஆட்சியாளா்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது. அடக்குமுறை, பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக் கொள்ள முடியாமல், திரிகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருந்த மகிந்த ராஜபட்ச இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக வெளியான செய்திகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்திருக்கிறது. ஆனாலும், கடல் வழியாக அவா் இந்தியாவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2009 ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழா்களை படுகொலை செய்தவா்கள் ராஜபட்ச சகோதரா்கள். அவா்களின் போா்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ளது. அத்தகைய போா்க் குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com