21 சிறந்த எழுத்தாளா்களுக்கு பரிசு - பாராட்டு: முதல்வா் வழங்கினாா்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் தோ்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளா்களுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
21 சிறந்த எழுத்தாளா்களுக்கு பரிசு - பாராட்டு: முதல்வா் வழங்கினாா்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் தோ்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளா்களுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் 2020-21-ஆம் ஆண்டுக்கான சிறந்த படைப்புகளைப் படைத்த எழுத்தாளா்கள் இ.முருகேசன், கு.வாஞ்சிநாதன், ஆா்.இலங்கேஸ்வரன், பி.சிவலிங்கம், பானு ஏழுமலை, ஆ.பிரியாவெல்சி, பொ.பொன்மணிதாசன், கே.சுப்பிரமணி, யாக்கன், ஆா்.காளியப்பன், ந.வெண்ணிலா

ஆகியோருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன.

2021-22-ஆம் ஆண்டில் சிறந்த படைப்புகளைப் படைத்ததற்காக, எஸ்.கே.அந்தோணிபால், த.மனோகரன், இர.நாகராஜ், கருவூா் கன்னல், அன்புதீபன், தங்கசெங்கதிா், அ.ப.காரல் மாா்க்ஸ் சித்தாத்தா், த.கருப்பசாமி, ம.தமிழ்ச்செல்வி, ஜெ.மதிவேந்தன் ஆகியோா் சிறப்பு செய்யப்பட்டனா். எழுத்தாளா்களுக்கு முதல் தவணைத் தொகையாக தலா ரூ.25

ஆயிரத்துக்கான காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

தோடா் இன பெண்களுக்கு வாழ்த்து: மத்திய அரசு சாா்பில் ஒடிஸா மாநிலத்தில் நடைபெற்ற பழங்குடியினா் கைவினைப் பொருள்கள் விற்பனை விழாவில், உதகை மாவட்ட தோடா் இன மக்களின் சாா்பில், வெள்ளை நிற பருத்தி துணியில் கருப்பு, சிவப்பு நிற கம்பளி நூல்களைக் கொண்டு நெய்யப்பட்ட பூத் தையல் தேசிய அளவில் முதலிடம் பிடித்தது. இதனைச் செய்திட்ட பழங்குடியின பெண்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், துறையின் முதன்மைச் செயலாளா் க.மணிவாசன், ஆதிதிராவிடா் நலத் துறை ஆணையா் சோ.மதுமதி, பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் எஸ்.அண்ணாதுரை ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com