தமிழ்நாட்டில் ஷவர்மாவிற்கு தடையில்லை: ஜெ.ராதாகிருஷ்ணன் 

தமிழ்நாட்டில் ஷவர்மாவிற்கு தடையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
தமிழ்நாட்டில் ஷவர்மாவிற்கு தடையில்லை: ஜெ.ராதாகிருஷ்ணன் 

தமிழ்நாட்டில் ஷவர்மாவிற்கு தடையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கடந்த 2 ஆம் தேதி கேரளம் மாநிலம், காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் நகரில் உள்ள துரித உணவுக் கடை ஒன்றில் "கெட்டுப்போனா ஷவர்மா" சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்தார், மேலும் 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் ஷவர்மா என்ற அசைவ உணவு பாதுகாப்பாக தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துகின்றனர். இந்தநிலையில் தமிழ்நாட்டில் ஷவர்மாவிற்கு தடையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, கேரளத்தில் நிகழ்ந்த சம்பவத்திற்கு பிறகு தொடர்ச்சியாக ஆய்வு நடந்து வருகிறது. 

கெட்டுப்போன மாமிசங்கள் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. கடைகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து சமைத்து 2 மணி நேரத்திற்குள் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com