நினைத்தவை நடக்கப் போகிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
நினைத்தவை நடக்கப் போகிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

சுபச் செய்திகள் கிடைக்கும். பொருளாதாரப் பிரச்னைகள் குறையும். மனக் குழப்பம் ஏற்படும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநபர்களிடம் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. எதிர்பாலினத்தவரின் ஆதரவு கிடைத்து, நல்ல சூழல் உண்டாகும்.

வியாபாரிகள் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. விவசாயிகளுக்கு மிகுந்த அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகளின் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பெண்களுக்கு பொருள் சேர்க்கை உண்டாகும்.  புதிய ஆராய்ச்சி தேடலும், தனித்திறனும் மாணவர்களுக்கு வெளிப்படும்.

அனுகூலமான தினங்கள்: 13,14
 சந்திராஷ்டமம்: 16,17.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொறுமையுடன் ஆராய்ந்து விவேகத்துடன் செயல்படவும். சேமிப்பு குறையும். அரசு தொடர்பான காரியங்களில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுங்கள். எதிர்காலச் சிந்தனைகள் தலைதூக்கும்.  பயணச் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் முதலீடு செய்வதற்கு முன்ஆலோசிப்பது நல்லது. வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை, செல்வாக்கு மேம்படும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினருக்கு இழுபறி குறையும். பெண்களின் மனதில் புதுவிதமான சிந்தனைகள், ஆசைகள் பிறக்கும். மாணவர்களோ தங்களது திறமைகளை வெளிப்படுத்துவீர்.

அனுகூலமான தினங்கள்: 14,15 
சந்திராஷ்டமம்: 18,19.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

மனதில் புது ஆசைகள், இலக்குகள் பிறக்கும். கற்பனையும் சிந்தனையும் அதிகரிக்கும். 

எதிரிகள் விலகுவார்கள்.  பழைய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு தவறிப்போன வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் சிந்தனை அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு லாபம் கூடும்.  அரசியல்வாதிகளுக்கு அனுகூலம் உண்டு. கலைத்துறையினர் பிறரிடம் கனிவுடன் பழகவும். திடீர் பயணம் ஏற்படும்.

பெண்களுக்கு பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களின் மனதில் நிலவிய கவலை நீங்கும்.புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை.

அனுகூலமான தினங்கள்: 13,15 
சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பூர்வீக சொத்துகளில் மாற்றம் செய்யும் சூழல் உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு,  மனை விஷயங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.  மனதை உறுத்திய பிரச்னைகளில் தெளிவு உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுக்கல்} வாங்கல் பிரச்னைகளில் வியாபாரிகளுக்கு கவனம் தேவை. கடன் பிரச்னைகளில் விவசாயிகள் விடுபடுவர்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடிவரும்.  கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும் வாய்ப்பு உண்டாகும். பெண்களுக்கு உடன்பிறந்தோரால் எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அனுகூலமான தினங்கள்: 14,16 
சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

பணவரவு அதிகரித்தாலும் பற்றாக்குறை இருக்கும்.  உறவினர்களிடம் சுமுகமான உறவு நீடிக்கும். இல்லத்தில் மதிப்பு உண்டாகும். அநாவசிய செலவுகளைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளின் கெடுபிடியால் மனம் தளர வேண்டாம். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு பொருளாதார வசதி கூடினாலும், அத்தியாவசிய செலவு அதிகப்படும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு  புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உண்டு. மாணவர்களின் முயற்சிகள் கை கூடும்.

அனுகூலமான தினங்கள்: 15,16 
சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

நிதி நெருக்கடி விலகும்.  சிக்கல்கள் நீங்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். உறவுகள் மேம்படும். மனம் மகிழும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

உத்தியோகஸ்தர்களின் சக போட்டியாளர்கள் தங்களது தீய செயலுக்கான பலனை உணர்வார்கள்.  புதிய முதலீட்டு வாய்ப்புகளை வியாபாரிகள் பரிசீலனை செய்யுங்கள். விவசாயிகள் பிறரிடம் அன்போடு நடந்துகொள்ளவும்.  

முடிவுகளை எடுக்க அரசியல்வாதிகளுக்கு தாமதம் ஏற்படும். கலைத்துறையினரின் பொருளாதார நிலை மேம்படும். பெண்களின் திறமைகள் வெளிப்படும். நல்ல மதிப்பெண்கள் பெற மாணவர்கள் உழையுங்கள்.

அனுகூலமான தினங்கள்: 13,16 
சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

வரவு-செலவு விஷயங்களில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல் ஏற்படும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை. தேவையற்ற மனக்கசப்புகள் குறையும்.

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  புதுவிதமான இலக்குகளை அடைய வியாபாரிகள் முனைவீர்.  கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விவசாயிகளுக்கு இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு அரசு உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு மதிப்பு மேம்படும். பெண்கள் புதிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களின் நல்லுறவு மேம்படும்.

அனுகூலமான தினங்கள்: 16,17 
சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். நண்பர்களால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பேச்சில் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் எதிர்ப்புகளைச் சமாளித்து, சாதனை படைப்பார்கள். தன்னம்பிக்கை பெருகும். மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரிகளின் முதலீடு பெருகும்.  கடன் விஷயத்தில் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு முன்னேற்றம் உண்டு.  அரசியல்வாதிகளுக்கு சிக்கல் உண்டாகும்.  கலைத்துறையினருக்கு ஆதாயம் உண்டாகும்.

பெண்களுக்கு ஆடை, அணிகலன்களின் சேர்க்கை உண்டாகும்.  மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். 

அனுகூலமான தினங்கள்: 15,17 
சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

புதிய முயற்சி, சிந்தனைகளில் அனுபவம் அதிகரிக்கும். எதிர்கால முதலீடு மேம்படும். செலவுகள் அதிகரிக்கும். தொந்தரவும் தொல்லையும் கொடுப்போரிடம் எச்சரிகையாக இருக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சவாலாக இருக்கும். வியாபாரிகள் கவனத்துடன் கறாராக இருக்கவும்.  அகலக்கால் வைக்க வேண்டாம். விவசாயிகள் வருவாய் கூடும். அரசியல்வாதிகள் மௌனமாக இருப்பதே சிறந்தது.

நெருங்கிய நண்பர்களே இடையூறுகளை ஏற்படுத்துவர். கலைத்துறையினரின் பொருளாதார நிலை மேம்படும்.  பெண்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது.

அனுகூலமான தினங்கள்: 16,17 

சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நெருக்கடியை சமாளிப்பீர்கள். பூர்வீக சொத்துகள் கைக்குவரும். இல்லத்தில் உறவினர்கள் வருகை உண்டு. சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மகிழ்ச்சி பெருகும்.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்பை மூலதனமாக்கி, பணிகளை விரைந்து செய்வீர்கள்.  வியாபாரிகள் முதலீடு விவகாரத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் உண்டாகும்.  கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். பெண்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் தீவிர ஈடுபாடு உண்டாகும்.விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள்.

அனுகூலமான தினங்கள்: 14,18 
சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

கனவிலும், கற்பனையும் நினைத்தவை நடந்தேறும்.  உயர்ந்தோரை மதித்துப் போற்றுவீர்கள். உடல் உபாதைகள் ஏற்படும்.  சுற்றுலா செல்வீர்கள். சுற்றுலா மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு காரியத் தடைகள் உருவாகும். வியாபாரிகள் பேச்சுத் திறமையால் வாடிக்கையாளர்களைக் கவருவார்கள்.  விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல்வாதிகளின் பெயர், புகழ் அதிகரிக்கும்.வெற்றிகள் வந்து சேரும்.கலைத்துறையினரின் ஒப்பந்தம் மேம்படும்.  பெண்கள் தங்களது உடைமைகளைப் பத்திரமாகப் பாதுகாக்கவும். பெற்றோரை மதித்து மாணவர்கள் நடந்துகொள்வார்கள்.

அனுகூலமான தினங்கள்: 18,19 
சந்திராஷ்டமம்: 13.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

ஒதுக்கி வைத்திருந்த விஷயங்களைப் புதுப்பிக்கத் தயாராவீர்கள். லாபம் கூடும். பொருளாதாரம் எழுச்சி பெறும்.  உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். நற்பெயர் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் தங்களது உழைப்பால் பாராட்டு பெறுவீர்.  பிரிந்தவர்கள் கூடுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் வியாபாரிகள் ஈடுபடுவார்கள். அநாவசியப் பேச்சுகளை அரசியல்வாதிகள் தவிர்ப்பது நல்லது.  கலைத்துறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும்.

பெண்கள் கணவரோடு சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்பார்கள். மாணவர்களுக்கு நற்பெயர் உண்டாகும். கடின உழைப்பால் முன்னேற்றம் உண்டு.

அனுகூலமான தினங்கள்: 13,19 
சந்திராஷ்டமம்: 14,15.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com