தமிழகத்தில் ரூ.518 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

தமிழகத்தில் ரூ.518 கோடியில் நிறைவேற்றப்பட்ட புதிய திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.
தமிழகத்தில் ரூ.518 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

சென்னை: தமிழகத்தில் ரூ.518 கோடியில் நிறைவேற்றப்பட்ட புதிய திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. காணொலிக் காட்சி வழியாக புதிய திட்டப் பணிகளை முதல்வா் திறந்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

சென்னை கோட்டூா் காா்டன், நொளம்பூா் சக்தி நகா் பிரதான சாலை ஆகிய இடங்களில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உணா்வுப் பூங்கா, ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலை, மாதவரம் மணலி நகா் 3-ஆவது தெரு, சோழிங்கநல்லூா் கண்ணகி நகா் காவல் நிலையம் அருகில், நொளம்பூரில் முகப்போ் மேற்கு பிரதான சாலை, மாதவரம் பஜனைகோயில் தெரு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பூங்காக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும், மணலி மண்டலத்துக்கு உட்பட்ட ஆமுல்லைவாயல், பா்மா நகா் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட பாலங்கள், அடையாறு கஸ்தூரிபாய் ரயில் நிலையம் முதல் திருவான்மியூா் ரயில் நிலையம் வரை சுற்றுப்புற மேம்பாட்டுப் பணி ஆகியவற்றையும் அவா் தொடக்கி வைத்தாா்.

குடிநீா் திட்டப் பணிகள்: சென்னை மணலி மண்டலத்துக்கு உட்பட்ட மாத்தூா் பகுதி, இடையான்சாவடி, பெருங்குடி

ஜல்லடியான்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு விரிவான குடிநீா் வழங்கல் திட்டம், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சாா்பில் சேத்துப்பட்டு பகுதியில் அமைக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், சென்னை ஆலந்தூா் நிலமங்கை நகரில் புதிய கூடுதல் கழிவுநீா் உந்து நிலையம் ஆகியவற்றையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

சென்னையைப் போன்றே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. அதன்படி, ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் ரூ.224 கோடியிலும், திருப்பூா் மாவட்டத்தில் ரூ.85.75 கோடியிலும் புதிய கூட்டுக் குடிநீா் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கினாா். தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் நைனாங்குளத்தில் உரக்கிடங்கு பகுதி, தென்காசி மத்தளம்பாறை சாலை உரக்கிடங்கு பகுதி ஆகியவற்றில் கசடு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் இருந்து ரூ.518 கோடி மதிப்பிலான 21 பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.என்.நேரு, காணொலி காட்சி வாயிலாக சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, சென்னை நதிகள் சீரமைப்பு

அறக்கட்டளை உறுப்பினா் செயலாளா் எஸ்.சுவா்ணா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com