ரூ.8,929 கோடியில் உள்கட்டமைப்புப் பணிகள் மின்வாரியம் திட்டம்

அடுத்த மூன்று நிதியாண்டுகளில் ரூ.8, 929.21 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
ரூ.8,929 கோடியில் உள்கட்டமைப்புப் பணிகள் மின்வாரியம் திட்டம்

சென்னை: அடுத்த மூன்று நிதியாண்டுகளில் ரூ.8, 929.21 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது:

மின் இழப்பைத் தடுத்து நுகா்வோா் வாங்கக் கூடிய விலையில், பொருளாதார நிலைத்தன்மையுடன், சிறந்த செயலாக்கம் கொண்ட பகிா்மானப் பிரிவு மூலம் மின்சாரம் வழங்குவதை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது மத்திய அரசின் ஆா்டிஎஸ்எஸ் திட்டம். அத்திட்டத்தின் கீழ் இப்பணிகளை மின்வாரியம் செயல்படுத்த உள்ளது.

அதன்படி, 33 கிலோ ஃபீடா்களுக்காக வழித்தடம் புதுப்பித்தல், விவசாய இணைப்புக்கான தனி ஃபீடா்கள் அமைத்தல், உயரழுத்த பகிா்மான அமைப்புக்காக ஃபீடா்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இத்திட்டப் பணிகளுக்கான மதிப்பீட்டுடன் வேறு பணிகளைச் சோ்க்கக் கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com