ஊரடங்கு: 10 லட்சம் வழக்குகள் ரத்து!

கரோனா காலத்தில், ஊரடங்கு உத்தரவுகளை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
ஊரடங்கு: 10 லட்சம் வழக்குகள் ரத்து!


கரோனா காலத்தில், ஊரடங்கு உத்தரவுகளை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில்,  கரோனா காலத்தில், ஊரடங்கு உத்தரவுகளை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார். 

முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தி தமிழக  உள்துறை செயலாளர் பிரபாகரன் கரோனா வழக்குகளை ரத்து செய்யும்படி காவல்துறைக்கு தற்போது உத்தரவிட்டுள்ளார். 

அந்த உத்தரவின்படி, கடந்த 2019-2020 ஆண்டு கரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காவல்துறையினருக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கரோனா ஊரடங்கு காலத்தில்(2019-2020), ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர்கள் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவ்வழக்குகளுள் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவற்றைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொதுமக்களின் நலன் கருதி ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். 

மேலும், ரத்து செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்கள் தொடர்பாக வரும் 17 ஆம் தேதிக்குள் தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்குமாறு தனது உத்தரவில் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com