அமைச்சர் மூர்த்தி(கோப்புப்படம்)
அமைச்சர் மூர்த்தி(கோப்புப்படம்)

நிதி நிலைமை பொறுத்து பேருந்து கட்டணம் உயர்வு: அமைச்சர் மூர்த்தி

நிதி நிலைமை பொறுத்து பேருந்து கட்டண உயர்வு குறித்து முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். 

 
மதுரை: நிதி நிலைமை பொறுத்து பேருந்து கட்டண உயர்வு குறித்து முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். 

மதுரை மாவட்டம் வரிச்சீயூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்து முகாம் மற்றும் காவல் நிலையத்தை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். 

பின்னர் அவர் பேசியதாவது: நூறு சதவிகிதம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கரோனா தொற்று குறித்து எந்தவொரு பயமும் இல்லை. மக்கள் எந்தவொரு பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது என்பதில் முதல்வர் மிகவும் கவனமாக உள்ளார். அதற்காக, கிராம மக்களுக்காக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்திருப்பதாகவும், விளம்பரத்துக்காக முதல்வர் செயல்படவில்லை என்றும், உண்மையிலே மக்களுக்காக முதல்வர் உழைத்து வருகிறார். மதுரை மாவட்டத்தில் நூறு சதவிகித தடுப்பூசி இலக்கை எட்ட மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். 

மேலும், விவசாயிகள் நலன் மீது முதல்வர் அக்கறை கொண்டதால், விவசாயத்துக்கு என தனி பட்ஜெட்டை கொண்டு வந்தார்.  மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகிய இரண்டு துறைகளுக்கும் முதல்வர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். தமிழ்நாட்டில் நடப்பது மக்களுக்கான அரசு என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என கூறினார்.   

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக மக்களிடம் தவறான பிரசாரம் செய்வது மூலம் ரத்தம் அழுத்தம் கொடுத்தால் அதையும் சந்திக்க இந்த அரசு தயாராக உள்ளது. தமிழக அரசு அனைத்தையும் சமாளித்து மக்களுக்கான பணிகளை செய்து வருகிறது. 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்வது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் வசூல் செய்யப்படும் ஜிஎஸ்டி வரியை தமிழ்நாட்டிற்கு மட்டும் மத்திய செலவு செய்தால் நன்றாக இருக்கும். தற்போது மிக குறைந்த அளவிலான ஜிஎஸ்டி வரியே வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழக அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி கடன் இருந்தாலும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியில் 60 சதவிகித வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றி உள்ளார். 

மேலும், திமுக அரசுக்கு எதிராக யார் என தவறான் பிரசாரங்களை செய்தாலும் மக்கள் பொறுப்படுத்த மாட்டார்கள். 

நிதி நிலைமையை பொறுத்து பேருந்து கட்டண உயர்வு குறித்து முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் ஆலோசித்து முடிப்பார்கள் என அமைச்சர் மூர்த்தி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com