பேரறிவாளன் விடுதலை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: பழ.நெடுமாறன் பேட்டி

பேரறிவாளன் விடுதலை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு எனவும், இதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்

பேரறிவாளன் விடுதலை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு எனவும், இதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். 

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த விடுதலைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இது குறித்து பழ.நெடுமாறன் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பேரறிவாளன் விடுதலை என்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்றும், இதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார். 

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 26 குடும்பத்தினருக்கும் மத்திய அரசும், மாநில அரசும் நிவாரணம் வழங்க வேண்டும். இது மனிதாபிமான செயல் எனவும் அவர் தெரிவித்தார். 

இந்தத் தீர்ப்பினை அடிப்படையாக கொண்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என பழ.நெடுமாறன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com