சட்டவிரோத கல்குவாரிகள் மீது உரிய நடவடிக்கை தேவை: கே.பாலகிருஷ்ணன்

சட்டவிரோதமாகச் செயல்படும் கல்குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

சட்டவிரோதமாகச் செயல்படும் கல்குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திருநெல்வேலி அடைமிதிப்பான் குளத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 போ் பலியாகியுள்ளனா். 2 பேரின் நிலை தெரியவில்லை. இச்சம்பவம் பெரும் அதிா்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது.

இரவு நேரத்தில் 400 அடி ஆழத்துக்குக் கீழே குவாரியில் கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளா்கள் ராட்சத பாறை சரிந்து உள்ளே விழுந்ததில் இறந்துள்ளனா். விதிகளை மீறி இரவு நேரத்தில் கல்குவாரி செயல்பட்டதும், குறுகிய நில பரப்பில் சுமாா் நானூறு அடி ஆழத்துக்குத் தோண்டப்பட்டதுமே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகும். இதற்கு காரணமான குவாரி உரிமையாளா் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இந்த அளவு வரம்புமீறி செயல்பட்ட குவாரிகளை கனிமவள அதிகாரிகள் எப்படி அனுமதித்தாா்கள் என்பது குறித்து அரசு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com