தமிழகத்தில் பணவீக்கம் குறைவு மகிழ்ச்சியளிக்கிறது: முதல்வர்

தமிழகத்தில் பணவீக்கத்தின் மதிப்பு விகிதம் குறைந்துள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

தமிழகத்தில் பணவீக்கத்தின் மதிப்பு விகிதம் குறைந்துள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கம் 6.2 சதவீதத்திலிருந்து 7.79% ஆக உயர்ந்துள்ள நிலையிலும் தமிழகத்தில் பணவீக்கம் மற்ற மாநிலங்களைவிட குறைவாக 5.37 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், இதனைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் “இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் இது 9 விழுக்காட்டைத் தாண்டி மக்களை வாட்டி வரும் நிலையில் நம் தமிழ்நாட்டில் இது மிகக் குறைந்த அளவில் 5.37 விழுக்காடாக மட்டுமே உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிடக் குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உணவுப் பொருட்களின் விலைவாசி குறைந்திருப்பதுடன் - மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் வழங்கியதன் மூலம் குறைந்த போக்குவரத்துச் செலவு எனப் பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கிய ‘திராவிட மாடல்’ நல்லாட்சியின் சாதனை இது என ஆய்வாளர்கள் பாராட்டுகின்றனர். இச்சாதனை தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com