தமிழகத்தில் 3,000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு

தமிழகத்தில் 3,000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை வளாகம்
பள்ளிக்கல்வித் துறை வளாகம்

தமிழகத்தில் 3,000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில், விருப்ப இடமாறுதல், பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங், மூன்று மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டது.

அதன்படி, 3,000 ஆசிரியர்கள் கூடுதல் இடங்களில் பதவியேற்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் நிறுத்தப்பட்டது. அரசாணை இல்லாமல், புதிய இடங்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று நிதித்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் பணி நீட்டிப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்கிடவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com