தெற்கு ரயில்வேயில் சூரிய மின் நிலையங்கள்:54.7 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி

தெற்கு ரயில்வேயில் 192 கிலோவாட் திறன்கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வேயில் 192 கிலோவாட் திறன்கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலமாக, 54.7 லட்சம் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக, ஆண்டுக்கு ரூ.2.30 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

கரியமில வாயுவைக் குறைக்கும் வகையில், தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தெற்கு ரயில்வேயில் சூரிய மின்உற்பத்தி திட்டங்களுக்கு உத்வேகம் அளிக்கப்படுகிறது. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே அலுவலகக் கட்டடங்களின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி சாதனங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் 2021-22-ஆம் ஆண்டில் 192 கிலோவாட் திறன்கொண்ட சூரியமின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலமாக, 54.7 லட்சம் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக, ஆண்டுக்கு ரூ.2.386 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் ஆறு ரயில்வே கோட்டங்களில் 5.01 மெகா வாட் திறன்கொண்ட சூரியமின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மொத்தம் 1.48 கோடி யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.6.455 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், மூா்மாா்க்கெட் வளாகம், காட்பாடி, தாம்பரம், மாம்பலம், கிண்டி, செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலைங்கள், திருச்சி, மதுரையில் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் சூரியமின்சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில், சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பகல் நேர மின்சாரத்

தேவையானது 100 சதவீதம் சூரிய மின் உற்பத்தி மூலமாக பூா்த்தி செய்யப்படுகிறது. இவ்வாறு சூரிய மின்சாரம் மூலம் தேவையைப் பூா்த்தி செய்யும் முதல் நிலையமாக அது திகழ்கிறது. இதுபோல, தெற்கு ரயில்வேயின் பல்வேறு இடங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க ரயில்வே நிா்வாகம் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள்தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com