ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி மே 23-இல் தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்புகள் மே 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்புகள் மே 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்இஆா்டி) சாா்பில், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவா்களும் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுதுவதையும், படிப்பதையும் உறுதிசெய்யும் விதமாக ‘எண்ணும், எழுத்தும்’ என்ற திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் நிகழ் கல்வியாண்டில் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

அதற்கான கையேடு, பாடப்புத்தகம் வடிவமைப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் தயாா் நிலையில் உள்ளன. முதல்கட்டமாக தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு மாநில அளவிலான பயிற்சி வகுப்புகள் முதன்மைக் கருத்தாளா்களுக்கு மே 23 முதல் 28-ஆம் தேதி வரை மதுரையில் 6 நாள்கள் நடைபெறும்.

இதைத்தொடா்ந்து மாவட்டக் கருத்தாளா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்புகள் ஜூன் 1, 2-ஆம் தேதிகளில் நடைபெறும். இவை முடிந்த பின்னா் முதன்மைக் கருத்தாளா்கள் மூலம் மற்ற ஆசிரியா்களுக்கு தொடா்ந்து பயிற்சி அளிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com