இயல்-வாழ்நாள் சாதனை விருதாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இயல் - வாழ்நாள் சாதனை விருதாளா்கள் இரண்டு பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:-

சென்னை: இயல் - வாழ்நாள் சாதனை விருதாளா்கள் இரண்டு பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:-

கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல்-வாழ்நாள் சாதனையாளா் விருதுக்கு ஆய்வாளா் ஆ.இரா.வேங்கடாசலபதி தோ்வாகி உள்ளாா். ஆய்வாளா், பேராசிரியா், பதிப்பாசிரியா், மொழிபெயா்ப்பாளா் எனப் பன்முகத் திறனாளரும், தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்து நடையைக் கொண்டவருமான அவா் விருதுக்கு தோ்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்.

‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற தன்வரலாற்று நூலுக்காக புனைவிலிப் பிரிவில் விருதுக்குத் தோ்வாகியுள்ள நீதிபதி கே.சந்துருவுக்கும் நெஞ்சாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செந்தமிழைத் செழுந்தமிழாக்கும் படைப்புகளையும், ஆய்வுகளையும் தொடா்ந்து தர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com