விலை ஏற்றத்தால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதை கூட மக்கள் குறைத்துவிட்டனர்: ப.சிதம்பரம்

விலை ஏற்றத்தால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதை கூட மக்கள் குறைத்துவிட்டதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ஒரு நடுத்தரக் குடும்பம் விலை ஏற்றத்தால் படும் பாட்டைக் கணவன்-மனைவியின் சொற்களில் கேளுங்கள். பழம், காய்கறி, பால் வாங்குவதைக் குறைத்துவிட்டோம். மிக முக்கியமான விசேஷம் தவிர புதுத்துணி வாங்குவதில்லை. 

வெளியூர் செல்வதையும், வெளியில் உண்பதையும் நிறுத்திவிட்டோம். CNG காரைப் பயன்படுத்துவது கட்டுப்படியாகவில்லை. இன்று என்ன சமைப்பது என்பதே பெரிய பிரச்னையாகிவிட்டது. ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போடுகிறோம், ஆனால் மூன்றாம் வாரத்திலேயே மூச்சு திணருகிறது. 

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் நிலை இதுவென்றால், ஏழைக் குடும்பங்களின் நிலை எவ்வளவு அவலமாக இருக்கும் என்று சிந்தியுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com