பொறியியல், டிப்ளமோ கட்டணங்கள் உயர்வு: மாணவர்கள் நிலை...?

பொறியியல் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழிநுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

பொறியியல் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழிநுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. 

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சம் ரூ. 79,600 எனவும், அதிகபட்சம் ரூ.1.15 லட்சம் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

டிப்ளமோ படிப்பிற்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900 முதல் அதிகபட்சம் ரூ.1.40 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சம் ரூ. 1,41,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.3,04,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

3 ஆண்டு எம்.சி.ஏ. படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.85 ஆயிரம் முதல் ரூ.1,94,00 உயர்த்தப்படுகிறது.  2 ஆண்டு எம்பிஏ படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,95,200ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189, பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 என ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி கட்டணத்தை குறைக்க கூடாது எனவும் ஏஐசிடியு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் வரையிலான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிராமப்புறங்களில் தொழில்நுட்ப படிப்பை விரும்பும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com