குரங்கு அம்மை: ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு

குரங்கு அம்மை நோய் பரவியதை அடுத்து, தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியதையடுத்து, தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றவர்களை உரிய முறையில் பரிசோதனை செய்ய மாவட்ட மருத்துவ அலுவலர்களுடன் இணைந்து, நோய் பரவாமல் விழிப்புடன் இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தனது சுற்றறிக்கையில், குழந்தைகள் உள்பட மக்களின் உடலில் விவரிக்க முடியாத தடிப்பு ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருக்குமாறு ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் உள்ளவர்களை சுகாதார மையங்களில் தெரிவிக்குமாறு மாநில சுகாதார செயலாளர் மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

ரத்தம், சளி, மற்றும் வெசிகல்ஸ் திரவம் அடங்கிய ஆய்வக மாதிரிகளை தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்புமாறு மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com