மேட்டூர் காவிரியில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்: காரணம் என்ன?

மேட்டூர் காவிரியின் டெல்டா பாசன கால்வாயில் மாதையன் குட்டை என்ற பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் காவேரி கரையில் துர்நாற்றம் வீசுகிறது.
செத்து மிதக்கும் மீன்கள்.(கோப்புப்படம்)
செத்து மிதக்கும் மீன்கள்.(கோப்புப்படம்)


மேட்டூர் காவிரியின் டெல்டா பாசன கால்வாயில் மாதையன் குட்டை என்ற பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் காவேரி கரையில் துர்நாற்றம் வீசுகிறது. மீன்கள் இறப்பதற்கு காரணம் என்ன? என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேட்டூர் நீர் தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. நீர்த்தேக்கத்தில் கட்லா, ரோகு, மிர்கால், அரஞ்சான் ஆறால். கெழுத்தி கெண்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீன்கள் உள்ளன.

மேட்டூர் நீர் தேக்கத்தில் 2000 மீனவர்கள் உரிமம் பெற்று மீன்பிடித்து வருகின்றனர். மேட்டூர் மீன்கள் சுவை மிகுந்தது என்பதால் மாநில முழுவதும் மேட்டூர் மீன்களுக்கு நல்ல கிராக்கி உண்டு.

நேற்று மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தமிழக முதல்வர் தண்ணீர் திறந்து விட்டார். 

இந்நிலையில், புதன்கிழமை காலை டெல்டா பாசன கால்வாயில் மாதையன் குட்டை என்ற பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் காவேரி கரையில் துர்நாற்றம் வீசுகிறது. பலவகை மீன்கள் இருந்தாலும் குறிப்பாக அரஞ்சான் மீன்கள் மட்டுமே செத்து மிதக்கின்றன. 

கடும் வெப்பம் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறந்ததா அல்லது மேட்டூர் காவிரியில் ஆங்காங்கே கலக்கின்ற ஆலைகளின் கழிவுநீர் மற்றும் மேட்டூர் அனல் நிலைய கழிவுநீர் கலப்பதால் கனிமங்கள் அதிகரித்து நீங்கள் சேர்த்து மிதக்கின்றதா என்பது மர்மமாக உள்ளது. 

மீன்கள் ஆண்டுதோறும் பல்வேறு காரணங்களால் செத்து மிதப்பதால் மேட்டூர் நீர் தேக்கம் மற்றும் காவிரியில் மீன்வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனை தடுக்க மீன்வளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து செயல்பட்டு மீன்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com