அமைச்சர் வருகை: கொடிக்கம்பங்களால் குடிநீர் குழாய்கள் உடைந்து சேதம்

அமைச்சரை வரவேற்க வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களால் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணானதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். 
அமைச்சர் வருகை: கொடிக்கம்பங்களால் குடிநீர் குழாய்கள் உடைந்து சேதம்

அமைச்சரை வரவேற்க வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களால் குடிநீர்க் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணானதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே புதிய வேளாண்மை விரிவாக்க மையத்தை தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சரை வரவேற்பதற்காக வழிநெடுகிலும் திமுகவினர் ஆங்காங்கே கொடிக்கம்பங்களை நட்டு வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்தப் பகுதிக்கு நான்கு நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் குடிநீர் விநியோகத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

திறந்து விடப்பட்ட தண்ணீர், வீடுகளுக்குச் செல்லாமல் அமைச்சரை வரவேற்க வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களின் வழியாக பீறிட்டு வெளியேறியது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அவதிக்கு ஆளாகினர். 

இதுகுறித்து குடிநீர் நீரேற்று நிலைய அதிகாரிகளுக்கு மக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து பின்னர் உடனடியாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது குழாய் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

கோடைக் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் தண்ணீர் திறந்து விடக் கூறி மறியல் செய்து வரும் நிலையில், இப்பகுதியில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது மக்களை வருத்தமடையச் செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com