Enable Javscript for better performance
கொளத்தூரில் மிளிரப்போகும் பல்லவன் சாலை: புதிய பணிகளுக்கு அடிக்கல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கொளத்தூரில் மிளிரப்போகும் பல்லவன் சாலை: புதிய பணிகளுக்கு அடிக்கல்

    By DIN  |   Published On : 26th May 2022 01:35 PM  |   Last Updated : 26th May 2022 04:46 PM  |  அ+அ அ-  |  

    kolathur_stalin

    கொளத்தூரில் மிளிரப்போகும் பல்லவன் சாலை: புதிய பணிகளுக்கு அடிக்கல்

    கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் ரூ.2.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள செயற்கை புல் கால்பந்து மைதானம், சுற்றுச் சுவர், நடைபாதை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, சென்னையைச் சிங்காரச் சென்னையாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிவடைந்தது. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் “சிங்காரச் சென்னை 2.0” திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இதையும் படிக்க.. சிரிப்பென்றால் ஹா..ஹா.. என்று ஸ்மைலி போடுவது அல்ல: அதற்கும் மேல

    அந்த வகையில், சுற்றுச்சூழல், கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இத்திட்டத்தின் நோக்கம் நகரத்தை மறுவடிவமைத்து, வாழும் தரம் மற்றும் நீடித்த நிலைப்புத் தன்மையை மேம்படுத்தி உலகின் சிறந்த நகரங்களுக்கு இணையாக மாற்றுவதே ஆகும்.

    அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (26.5.2022) சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் “சிங்காரச் சென்னை 2.0” திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 86 இலட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் செயற்கை புல் கால்பந்து மைதானம், ரூபாய் 30 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர், ரூபாய் 7 இலட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபாதை,

    இதையும் படிக்க.. ஒற்றைக் காலில் குதித்து குதித்து பள்ளிச் செல்லும் சிறுமி

    ரூபாய் 24 இலட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் பார்வையாளர் மாடம் மற்றும் குடிநீர் வசதி, கழிவறை  வசதி, கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி மேற்கொள்ளுதல் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 83 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp