மாநிலங்களவைத் தேர்தல்: ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். 
வேட்புமனுத் தாக்கல் செய்யும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்.
வேட்புமனுத் தாக்கல் செய்யும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் வெவ்வேறு நாள்களில் நிறைவடைகிறது. இதையடுத்து 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்றும், ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும், தோ்தலுக்கான அறிவிக்கை மே 24-ஆம் தேதி வெளியிடப்பட்டு, வழக்கம்போல், வாக்குப்பதிவு முடிந்த ஒரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. 

இதையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயரை அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த மே.15ஆம் தேதி அறிவித்தார். அதன்படி, திமுக வேட்பாளர்களான தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், இரா. கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.சீனிவாசனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

உடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் இருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com