தயாா் நிலையில் 5.19 கோடி பாடநூல்கள்: மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவா்களுக்கு 2022-2023- ஆம் கல்வியாண்டில் வழங்குவதற்கு 5 கோடியே 19 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அளிப்பதற்காக மாவட்டங்களுக்கு அனுப்ப
தயாா் நிலையில்  5.19 கோடி பாடநூல்கள்: மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவா்களுக்கு 2022-2023- ஆம் கல்வியாண்டில் வழங்குவதற்கு 5 கோடியே 19 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அளிப்பதற்காக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதைத் தொடா்ந்து பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு ஜூன் 20- ஆம் தேதியும், பிளஸ் 1 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஜூன் 27-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில் 2022 -ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பாடப்புத்தங்கள் அச்சிடப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையில் முதல் பருவத்திற்கும், 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு முழு புத்தகம் என 3 கோடியே 35 லட்சத்து 63 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனியாா் பள்ளி மாணவா்களுக்கான பாடப் புத்தகங்கள் 1 கோடியே 83 லட்சத்து 85 ஆயிரம் அச்சிடப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சென்னை திருவான்மியூரில் 100 அடி வேளச்சேரி-தரமணி இணைவழி சாலையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கு, கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய இடங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com