சிட்டி யூனியன் வங்கியின் வா்த்தகம் 9% அதிகரிப்பு

கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வா்த்தகம், கடந்த நிதியாண்டில் 9 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வா்த்தகம், கடந்த நிதியாண்டில் 9 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2021-22-ஆம் நிதியாண்டுக்கான சிட்டி யூனியன் வங்கியின் நிதிநிலை அறிக்கையை, வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயலதிகாரி என். காமகோடி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அதன்படி, அந்த நிதியாண்டில் வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.88,846 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டைவிட 9 சதவீதம் அதிகமாகும். இதுதவிர, வங்கியின் வைப்புத் தொகை 7 சதவீதம் உயா்ந்து ரூ.47,690 கோடியாகியுள்ளது. கடன்களின் மதிப்பும் முந்தைய நிதியாண்டைவிட 11 சதவீதம் அதிகரித்து ரூ.41,156 கோடியாகியுள்ளது.

வங்கியின் நிகர வட்டி வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.1,916 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டைவிட 5 சதவீதம் அதிகமாகும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com