நாளை முதல் டெல்டா மாவட்டங்களில்  முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

கடந்த 24 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார். 
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்


சென்னை: கடந்த 24 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார். 

இந்த ஆய்வின்போது டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகளை முதல்வர் பார்வையிடுகிறார். இதற்காக, நாளை திங்கள்கிழமை காலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு செல்ல உள்ளார். 

அன்று புதுக்கோட்டையில் 3 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். 

நாளை மறுநாள் நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார். 

சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்துக்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com