மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். 
மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

சென்னை தலைமைச் செயலத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் சி.வி. சண்முகம், ஆர். தர்மர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேருக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ஆம் தேதி, மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3 என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. போட்டி இருக்கும்பட்சத்தில் வாக்குப் பதிவு ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும்.

தோ்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன் 13-ஆம் தேதி நிறைவடையும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக 3 இடங்கள், காங்கிரஸ் ஒரு இடம், அதிமுக 2 இடங்களில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com