57 தொழிற்பேட்டைகளில் அடிப்படை வசதிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தமிழ்நாடு சிட்கோவால் ரூ.739.27 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் 78 திட்டப் பணிகள் குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். 
57 தொழிற்பேட்டைகளில் அடிப்படை வசதிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தமிழ்நாடு சிட்கோவால் ரூ.739.27 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் 78 திட்டப் பணிகள் குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். 

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு சிட்கோ தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 10 வருடங்களாக சிட்கோ தொழிற்பேட்டைகளில் எவ்வித அடிப்படை பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாததால், குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்தன.

கடந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ரூ.10 கோடி செலவில் 57 தொழிற்பேட்டைகளில் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால்கள், தெரு விளக்குகள், புதர்செடிகளை அகற்றுதல் மற்றும் அனைத்து தொழிற்பேட்டைகளின் நுழைவாயில்களிலும் பெயர் பலகை வைத்தல் போன்ற பராமரிப்புகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மனை தொகை, பராமரிப்புக் கட்டண வசூலில் எவ்வித தோய்வும் இன்றி உடனடியாக வசூலிக்க வேண்டும். 

தமிழக அரசின் குறு குழும வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.23.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் விருதுநகர்-நெசவு குழுமம், கோவை-அலுமினியம் அச்சு வார்ப்பு குழுமம் மற்றும் தங்க நகை ஹால்மார்க் குழுமம், கடலூர் – பீங்கான் மின்காப்பு உபகரணம், ஈரோடு- மஞ்சுள் உற்பத்தி குழுமம், ஜமக்கால உற்பத்தி குழுமம் ஆகிய குறு குழுமங்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

தனியார் தொழிற்பேட்டை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் மானியத்துடன் ரூ.137.19 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 9 தொழிற்பேட்டைகளில், தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையினை விரைந்து பெற்று பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள 34 நிறுவனங்களுக்கு விற்பனைப்பத்திரங்கள் மற்றும் தொழிற்மனை ஒப்படைப்பு ஆணைகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com