கம்பத்தில் பகவதியம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்

தேனி மாவட்டம், கம்பம் அருள்மிகு பகவதியம்மன்  கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் புதன்கிழமை கம்பம் கம்பமெட்டு சாலையில் நடைபெற்றது.
இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்
இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்


கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருள்மிகு பகவதியம்மன்  கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் புதன்கிழமை கம்பம் கம்பமெட்டு சாலையில் நடைபெற்றது.

கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் என். ராமகிருஷ்ணன்  கொடியசைத்து பந்தயத்தை தொடங்கி  வைத்தார்.

தேன்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு என 5 வகையான பிரிவுகளில் பந்தயத்தில் மாட்டு வண்டிகள்  126-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. 

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி  உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

இந்த இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தை சாலையில் இருபுறங்களில் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

கம்பம், உத்தமபாளையம், கூடலூர், தேவாரம், மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.

ஏற்பாடுகளை கம்பம் காமுகுல ஒக்கலிகர் மகாஜன சங்கத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com