தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடா் மழை காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளிகளுக்கும், 3 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (நவ.2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடா் மழை காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளிகளுக்கும், 3 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (நவ.2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டிருந்தது. புதன்கிழமையும் அதிகாலையில் இருந்தே மழை பெய்து வருவதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர்(1 முதல் 8 ஆம் வரை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தும், கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளார் .

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: 
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: 
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை

இதனிடையே, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் அடுத்த 3  மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் கனமழை காரணமாக மயிலாப்பூர், ராயபுரம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் விழுந்த 5 மரங்களை தீயணைப்புத்துறையினர் விரைந்து அப்புறப்படுத்தியதை போக்குவரத்து சீராகியுள்ளது. 

சென்னை முழுவதும்தொடர் மழை காரணமாக சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும்பாலானோா் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com