சுடச்சுட மழை நிலவரம் வெளியிட்ட தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக பலத்த மழை பெய்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சுடச்சுட மழை நிலவரம் வெளியிட்ட தமிழ்நாடு வெதர்மேன்
சுடச்சுட மழை நிலவரம் வெளியிட்ட தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக பலத்த மழை பெய்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாள்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மழை நிலவரம் பற்றிய சுடச்சுட தகவல்களை வானிலை துணுக்கு என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

அதாவது,  
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியின் ஒரு சில பகுதிகளில் மிகத் தீவிரமான இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் பிற காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை நிலவரம் - அடுத்த 60-90 நிமிடங்களில் மற்றொரு மழை பெய்யத் தொடங்கும்.
இதையும் படிக்க | வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல ரெடியான மோர்பி மருத்துவமனை: விடியோ வெளியிட்ட பிரசாந்த் பூஷண்

அடிலெய்டு (இந்தியா - வங்கதேசம்) மோதும் போட்டியை மழை சிறிது நேரத்திலேயே பாதிக்கலாம், மழையால் போட்டி பாதித்தாலும், சில இடைநிறுத்தங்களுக்குப் பிறகு, போட்டி மீண்டும் தொடங்கும். சில ஓவர்கள் குறைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

அவர் சொன்னது போலவே, அடிலெய்டில் கிரிக்கெட் போட்டி தொடங்கியதும் சில நிமிடங்களில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டதாக பலரும் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com