காஞ்சிபுரம் மாவட்டத்தில் எத்தனை ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 29 ஏரிகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எத்தனை ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது?


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 29 ஏரிகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த இரண்டு தினங்களாகப் பெய்து வரும் தொடா் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியின் தற்போதைய நீா்மட்டம் 20.75 அடியாகவும், நீா்வரத்து 800 கன அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,764 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்ட அளவான 24 அடியில், தற்போது 20.75 அடி நீா் நிரம்பி உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை ஏரியில் இருந்து 5 கண் மதகில் இரண்டாவது ஷெட்டா் வழியாக வினாடிக்கு 100 கன அடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்தூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் வெள்ள பாதிப்புகளைக் கண்காணிக்க 21 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 11 அரசுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் அந்தக் குழுக்களில் இடம் பெற்றுள்ளனா்.

முழு கொள்ளளவு:  கடந்த இரண்டு நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 29 ஏரிகள் 100 சதவீதமும், 22 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேலாகவும், 98 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலாகவும், 181 ஏரிகள் 25 சதவீதத்திற்கு மேலாகவும் நிரம்பி வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com